’திருநங்கை என்ற சொல்லுக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் அளித்ததுடன் அவர்களுக்கான நலவாரியமும் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அத்தகைய பெருமைக்குரிய கலைஞரின் நூற்றாண்டில் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்று அவரின் கனவுகளைச் சாத்தியமாக்கும் சகோதரி நிவேதாவுக்கு வாழ்த்துகள்.
திருநங்கை நிவேதாவுக்கும் சின்னதுரைக்கும் ஸ்டாலின் வாழ்த்து
லேடி வெலிங்டன் பள்ளியில் படித்து +2 தேர்வு எழுதியிருக்கும் நிவேதா மூன்றாம் பாலினத்தவர். இந்த ஆண்டு திருநங்கை என்று அதிகாரபூர்வமாகத் தேர்வு எழுதி பாஸ் செய்திருப்பவர் இவர் ஒருவரே. இந்த பள்ளியில் இவர் திருநங்கை என்ற பாகுபாடு காட்டாமல் படிக்க வைத்து தேர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள்.
இவர் வெற்றி அடைந்ததை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் கூப்பிட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது திருநங்கையர்களை மகிழ்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. இவர்களைப் போன்றவர்களுக்கு அரசு துணை நிற்கிறது என்பதே மகிழ்ச்சி.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘’திருநங்கை என்ற சொல்லுக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் அளித்ததுடன் அவர்களுக்கான நலவாரியமும் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அத்தகைய பெருமைக்குரிய கலைஞரின் நூற்றாண்டில் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்று அவரின் கனவுகளைச் சாத்தியமாக்கும் சகோதரி நிவேதாவுக்கு வாழ்த்துகள்.
வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாசல்களைத் திறப்பதுதான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசின் லட்சியம் என்பதற்கு இன்னோர் எடுத்துக்காட்டு நிவேதாவின் வெற்றி. சகோதரி நிவேதா இன்னும் பல உயரங்களை எட்டி, திருநர் சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழைக்க வாழ்த்துகிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
இது சிறப்பான முன்னெடுப்பு என்பதால் முதல்வரை பாராட்டுவோம். அதேபோல் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரைக்கும் முதல்வர் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.