சுபஸ்ரீ செத்தது அவ தலைவிதி! பிரேமலதாவின் அகங்கார பேச்சு! அதிர்ச்சியில் உறவுகள்!

தமிழ்நாட்டை உலுக்கிய சுபஸ்ரீ மரணமானது விதியால் நேர்ந்தது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் ரேடியன் சாலையில் அமைந்துள்ள மண்டபத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இதற்காக சாலை முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் பிரம்மாண்டமாக அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தன. இங்கு இருசக்கர வாகனத்தில் பி.டெக் படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி சென்று கொண்டிருந்தார்.

சாலையோரத்தில் அமைந்திருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் சுபஸ்ரீ நிலைதடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது. 

இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள பலரையும் சில நாட்களாக பெரிதளவில் பாதித்துள்ளது. 

பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இனி கட்சி சார்பில் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சில நாட்களுக்கு முன்னர் பேசுகையில், "சுபஸ்ரீ இறந்தது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு‌. அதிமுக பேனர் என்பதால் ஊதி பெரிதாக்குகின்றனர்"  என்று அலட்சியமாக பேசியிருந்தார். இந்த பேச்சானது மக்களிடையே பெரும் எதிர்ப்பை சந்தித்தது.

தற்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் சுபஸ்ரீ மரணத்தை மிகவும் கொச்சைப்படுத்தி விட்டார். "பேனர் சுபஸ்ரீ மீது விழுந்ததும், அந்நேரத்தில் லாரி வந்ததும் விதி. அதற்கு யாரும் ஒன்றும் செய்ய இயலாது. அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்ததால் எதிர்க்கட்சி தலைவர் இதனை பெரிதாக்கினார்" என்று மனிதநேயமின்றி பேசியுள்ளார்.

இந்த பேச்சானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.