நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் டிஆர் பாலு! கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகன்! வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்!
வடசென்னை _ கலாநிதி வீராச்சாமி
மத்திய சென்னை – தயாநிதி மாறன்
தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
ஸ்ரீபெரும்புதூர் – டிஆர்.பாலு
காஞ்சிபுரம் – ஜி.செல்வம்
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
வேலூர் – கதிர் ஆனந்த்
தருமபுரி - செந்தில்குமார்
திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி
நீலகிரி – ஆ.ராசா
பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்
திண்டுக்கல் – ப.வேலுச்சாமி
கடலூர் – டிஆர்பிஎஸ்.ரமேஷ்
மயிலாடுதுறை - ராமலிங்கம்
தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
திருநெல்வேலி – ஞான திரவியம்
தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி
சேலம் – பார்த்திபன்
தென்காசி – தனுஷ் குமார்
இந்தப் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் கலாநிதி போட்டியிடுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் ஆவார். மத்திய சென்னையில் தயாநிதி மாறன் களமிறங்குகிறார்.
தென் சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் களமிறங்குகிறார். காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணாதுரை அல்லது செல்வம் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அரக்கோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் திமுக வேட்பாளராக போட்டியிட தயாராகி வருகிறார்.
வேலூரில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் திமுக வேட்பாளர் ஆக்கப்பட்டுள்ளார். தர்மபுரியில் முன்னாள் எம்பி தாமரைச்செல்வன் கே திமுக மீண்டும் வாய்ப்பு அளிக்க உள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார். நீலகிரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா வும் பொள்ளாச்சியில் பொங்கலூர் பழனிச்சாமியின் உறவினர்கள் பழனிச்சாமியும் திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை தொகுதியில் என் அண்ணாதுரை என்பவருக்கு திமுக வாய்ப்பளிக்க உள்ளது. திண்டுக்கல்லில் வேலுச்சாமியும் கடலூரில் எம்ஆர்கே பன்னீர் செல்வத்தின் மகன் கதிரவனும் திமுக வேட்பாளராக உள்ளனர்.
மயிலாடுதுறை தொகுதியில் ராமலிங்கம் அல்லது jp பாண்டியன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். கடந்த முறை தஞ்சை தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் எஸ் எஸ் பழனி மாணிக்கத்திற்கு இந்த முறை மீண்டும் வாய்ப்பளிக்க ஸ்டாலின் முன்வந்துள்ளார்.
திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளராக வேலுச்சாமி என்பவர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. சேலம் தொகுதியில் டாக்டர் பிரபு என்பவரும் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியும் போட்டியிட உள்ளனர்.
தென்காசி மற்றும் நெல்லை தொகுதியில் வேட்பாளர் யார் என்பதில் தற்போது வரை இழுபறி நீடிக்கிறது. இருந்தபோதிலும் நெல்லை தொகுதியில் கிரகாம்பெல் அல்லது ஞானவேல் ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடுவார் என்கிறார்கள். தென்காசி தனித்தொகுதியில் தனுஷ் குமார் அல்லது பொன்ராஜ் ஆகிய இருவரில் ஒருவரை திமுக வேட்பாளராக நிறுத்த உள்ளது.