மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இரண்டு மாணவிகள் தான் குறி! அத்துமீறி அசிங்கம் செய்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!
பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையம் விதைப்பண்ணை எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு செல்லமுத்து என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் சக்திவேல். சக்திவேலின் வயது 47. இவர் பவானியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அப்பள்ளியில் 11-ஆம் வகுப்புக்கு தாவரவியல் எடுத்து வருகிறார். இவர் அந்த வகுப்பறை மாணவிகளிடம் மிகவும் தவறாக நடந்து கொண்டு வந்துள்ளார். இது குறித்து மாணவிகளின் சார்பில் பலமுறை குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. பள்ளி நிர்வாகமும் சக்திவேலை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கடந்த 2 நாட்களாக சக்திவேல் 2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். 2 மாணவிகளின் பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்த இன்னல்கள் குறித்து கூறியுள்ளனர். உடனடியாக அவர்கள் தங்களது உறவினர்களுடன் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். 2 மாணவிகளின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
பெற்றோரின் நடவடிக்கைகளை அறிந்தவுடன் சக்திவேல் தலைமறைவானார். புகாரை பதிவு செய்துக்கொண்ட காவல்துறை ஆய்வாளர்கள் சக்திவேலை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சக்திவேல் நேற்று சங்ககிரி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது காவல்துறையினரிடம் பிடிபட்டார்.
காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.