பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் பழகிய காதலன்! உண்மை புரிந்து ஆசிரியை எடுத்த கொடூர முடிவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாணடஅள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரை காதலிப்பதாக கூறி பழகி வந்த நபர் திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தில் பழகவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


கூலித்தொழிலாளியனா பிரீத்தா என்பவர் பி.எட் முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துவந்தார். பிரீத்தா அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் என்பவர் கடந்த 5 வருடங்களாக பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் பிரபு செல்வத்தை அனுகிய பிரீத்தா தன்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும்

உடனே நமது திருமணம் நடந்தாகவேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அவர் திருமண ஏற்பாடுகள் செய்ய பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். பிரபு செல்வம் பணம் கேட்கும்போதல்லாம் அவ்வப்போது ஐந்தாயிரம், பத்தாயிரம் என பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி பணம் கொடுக்குமாறு பிரபு செல்வம் கேட்க தன்னிடம் இருந்த எல்லா பணத்தையும் கொடுத்துவிட்டதாகவும் இனி கேட்கவேண்டாம் கூற ஆத்திரமடைந்த பிரபு

செல்வம் பணத்தை கொடுக்காவிட்டால் நான் உன்னுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை வெளியிடுவேன் என் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரித்தா தன்னை பிரபுசெல்வம் உண்மையாக காதலிக்கவில்லை என்பதையும் உடலை பகிர்ந்து கொள்ள மட்டுமே பழகியதையும் நினைத்து வேதனையடைந்தார்.

இதனால் மனஉளைச்சலின் உச்சத்திற்கே சென்ற பிரீத்தா இந்த பிரச்சனையை யாரிடமும் சொல்லி அவமானப்படுவதை விட உயிரை மாய்த்துக்கொள்வததே சரி என்று எண்ணி வீட்டிற்கு ஓடினார். வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டவுடன் அய்யோ அம்மா என அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பீரித்தா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிந்த மத்தூர் காவல் நிலைய போலீசார் பிரபுசெல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாமல் தற்கொலை செய்துகொண்டு பெரும்பாலான பெண்கள் குற்றவாளிகளை தப்பிக்க வைத்துவிடுகிறார்கள் என்பதே உண்மை.

யாருக்கும் தெரியாது என செய்யக்கூடிய தவறுகள் வெளியில் வரும்போது எல்லோருக்கும் தெரிந்து அவமானமாகிவிடும் என்பதை உணரும் காலம் எப்போதோ?