ஆச்சர்ய பலன் தரும் ருத்ராட்ச குளியல்! வீட்டில் நீங்கள் செய்யவேண்டிய வழிமுறை இதோ!

ருத்ராட்சக் குளியல் செய்து வருவதன் மூலமாகவும் ஈசனின் அருள் கடாட்சத்தை பெறலாம்;


தினமும் குளிக்கும் நீரில் இந்த ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 உள்ள மாலையை குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்;அதன் பிறகு,குளியலறைக்குள் புகுந்து கிழக்கு நோக்கி நிற்க வேண்டும்;(நிற்க இயலாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம்) வாளி தண்ணீரில் புதைந்திருக்கும் ருத்ராட்ச மாலையை எடுத்து தலைமீது வைத்துக் கொள்ள வேண்டும்;சுருட்டியும் வைக்கலாம்;சுருட்டாமலும் வைத்துக் கொள்ளலாம்;அவ்வாறு வைத்துக் கொண்டு உங்களுக்குத் தெரிந்த சிவமந்திரம் ஒன்றை 12 முறை ஜபிக்க வேண்டும்; ஜபித்துமுடித்தப் பின்னர் மீண்டும் தண்ணீர் வாளிக்குள் ருத்ராட்ச மாலையை போட்டுவிட்டு அந்த தண்ணீரால் குளிக்க வேண்டும்; 

இதை பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும்,துக்க வீடுகளுக்கு சென்று வந்த நாட்களிலும் கூட செய்யலாம்; தினமும் இந்த ருத்ராட்சக் குளியலைச் செய்து வரலாம்; தினமும் செய்ய இயலாதவர்கள் அமாவாசை,சிவராத்திரி,திருவாதிரை,ப்ரதோஷ நாட்களிலும்,அவரவர் ஜன்ம நட்சத்திர நாட்களிலும் செய்யலாம்; 

ஏதாவது ஒரு அமாவாசை அன்று ருத்ராட்சக் குளியல் செய்யத் துவங்கி 90 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்;(சில பல தடைகள் வந்தாலும் விட்டுவிட்டாவது 90 நாட்கள் நிறைவு செய்யலாம்). இப்படிச் செய்து வருவதால்,ஆத்ம பலம் அதிகரிக்கும்;பிறர் நமக்கு எதிராக செய்த,செய்துவிட்ட,செய்ய இருக்கின்ற எல்லாவிதமான மாந்திரீகத் தீங்குகளும் நம்மையும்,நமது இருப்பிடத்தையும் விட்டு விலகிச் சென்றுவிடும்; 

உணவு,உடை,இருப்பிடம்,காற்று,நீர் என்று அனைத்திலும் செயற்கையான கண்டுபிடிப்புகள் அதிகரித்துவருகின்றன;அதனால்,நமது ஆன்மீக பலம் குறைந்துவருகின்றது;அதை ஈடுசெய்யக் கூடியதுதான் இந்த ருத்ராட்சக் குளியல்!