செளசெள சாப்பிட்டால் தைராய்டு பிரச்னை தீரும் என்பது உண்மையா?

மத்திய மற்றும் அமெரிக்க மக்களின் விருப்பமானது என்று செளசெள காயை சொல்லலாம். ஏனென்றால் இந்த காய்க்கு தனியே ருசி இல்லை என்பதால் காரம், இனிப்பு, புளிப்பு போன்ற தேவையான சுவையை தரும்படி சமைக்கமுடியும்.


நம் நாட்டில் பெங்களூர், மைசூர் பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது என்பதால் இதனை பெங்களூர் கத்தரிக்காய் என்றும் சொல்கிறார்கள். இளம் காயை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

• வைட்டமின் பி, வைட்டமின் சி, புரத சத்துக்கள் செளசெளவில் நிறைந்திருப்பதால் உடல் ஆற்றலை அதிகரிக்கிறது. 

• தைராய்டு பிரச்னையைத் தீர்க்கும் அயோடின், தாமிரம் போன்றவை செளசெளவில் அதிகம் இருக்கிறது.

• வைட்டமின் கே இருப்பதால், எலும்பு வலிமையடைய உதவுகிறது. குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

• உடலின் பொட்டாசியத் தேவையை செளசெள பூர்த்தி செய்கிறது என்பதால் ரத்த அழுத்த பிரச்னைக்கு நல்லது.

விலை மலிவான காய் என்பதால் இதனை பலரும் மதிப்பதில்லை. வாரம் முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.