திருப்பூரில் பல ஆண்களுடன் பேசுவதை தவறாக நினைத்த கணவன் மனைவியை கொலைசெய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஒருத்தனா? ரெண்டு பேரா? எத்தனை பேருடி? மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட பகீர் சம்பவம்! திருப்பூர் அதிர்ச்சி!
திருப்பூர் சத்யா நகர் பகுதியை சேர்ந்த அப்துல் சமது என்பவருக்கும் விவகாரத்து செய்து கொண்ட நிஷா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அப்துல் சமது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது. இருவருக்கும் இல்வாழ்க்கை சுமூகமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக நிஷா அடிக்கடி மற்றவர்களுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
அவர் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்த அப்துல் சமது மனைவி மீது சந்தேகம் அடைந்துள்ளார். இதை பலமுறை கண்டித்தும் நிஷா கேட்டுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. நேற்று முன்தினமும் நிஷா போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார் அப்துல் சமது. நிஷா வாக்குவாதம் செய்ய ஆத்திரம் அடைந்த அப்துல் சமது குக்கரை கொண்டு நிஷாவை தாக்கினார்.
இதில் நிஷா மயங்கி விழுந்தார். பின்னர் அவரை கத்தியை கொண்டு கழுத்தை அறுத்து கொன்றுள்ளார் சமது. பின்னர் நேராக காவல்நிலையம் சென்று சரணடைந்துவிட்டார். விரைந்து வந்த அதிகாரிகள் நிஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சமதை கைது செய்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.