கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி செல்போனில் படம்பிடித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீண்ட காலத்திற்கு பின்னர் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
காரில் நடிகையை கடத்தி கற்பழித்து வீடியோ..! பிரபல தமிழ் நடிகை வெளியிடப்போகும் முக்கிய தகவல்! பிரபல நடிகர் சிக்குவாரா?
நடிகர் திலிப் மீது குற்றம்சாட்டப்பட்டு கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் நடிகை ரம்யா நம்பீசனிடம் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்கள் மூலம் பிரபலம் ஆன முன்னணி கதாநாயகியை கடந்த 2017-ம் ஆண்டு கேரளாவில் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி அதை செல்போனில் படம்பிடித்த சம்பவம் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து நடிகையை கடத்திய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்தார். இந்த வழக்கு கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 136 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகைகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட சிலர் திலீப்புக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.
நடிகர்கள் லால், இடைவேளை பாபு ஆகியோரும் வாக்குமூலம் அளித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24-ந் தேதி நிறுத்தப்பட்ட விசாரணை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. நடிகை ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரிடம் குறுக்கு விசாரணை நடக்க உள்ளது.