இரட்டைக் குழந்தை பிறப்பது இயற்கையான நிகழ்வுதான். பொதுவாக குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தை பிறந்திருந்தால், மற்றவர்களுக்கும் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. செயற்கை குழந்தைகளில் இரட்டை குழந்தை பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
இரட்டைக் குழந்தைகள்
·
இரண்டு குழந்தைகள் பிறந்தால் தாய்ப்பால்
போதுமானதாக இருக்காது என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
·
இரண்டு பேரும் ஒரே மாதிரியாக இருந்தாலும்,
இருவருடைய ஆசைகளும் குணமும் வெவ்வேறு மாதிரி இருக்கும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள
வேண்டும்.
·
இருவருக்கும் ஒரே மாதிரி டி.என்.ஏ.
இருந்தாலும், இருவருடைய கைரேகையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
·
இரண்டு பிள்ளைகளையும் ஒப்பிட்டுப்
பார்த்து பேசுவதால், அவர்களுக்கு இடையே பொறாமை உணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
ஒரு பிள்ளை நோய்வசப்பட்டால், அந்த நோய் நிச்சயம் அடுத்த
பிள்ளைக்கும் வரும் என்று பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆணும், பெண்ணுமாக பிறந்தால்,இரண்டு
குழந்தைகளையும் சமமாக கவனித்து வளர்க்கவேண்டியது அவசியம்.