ஓடும் ரயிலில் 2 பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் முத்தம் கொடுத்துக்கொண்ட போது அவர்களை பெண்ணொருவர் திட்டிய சம்பவமானது ஸ்பெயின் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயிலில் 2 பெண்கள் செய்த அசிங்கம்! ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர்களுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!
பார்சிலோனா நகரில் 2 பெண்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆவர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே, இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்டனர். அவர்களுடன் பயணித்த பிறர் இதனை அதிர்ச்சியாக பார்த்து வந்தனர்.
இந்நிலையில் பயணித்து வந்தார் மற்றொரு பெண் இவர்களில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். அந்த பெண் கூறுகையில், "பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொள்வது பெருத்த குற்றமாகும். இவ்வளவு அநாகரீகமாக நடந்து கொள்ளக்கூடாது. என் தம்பியும் ஓரினச்சேர்க்கையாளர் தான்.
ஆனால் அவர் இது போன்ற அநாகரிகமான செயல்களை பொது இடத்தில் செய்யமாட்டார். என் கண்முன் கூட அவன் ஓரினச்சேர்க்கையாளர் போன்று நடந்து கொள்ள மாட்டார். ஓரினச்சேர்க்கையாளர்களை பார்த்து பிறர் மதிக்க வேண்டும் என்றால், மதிப்பும் அழகு நீங்கள் கட்டாயமாக நடந்து கொள்ள வேண்டும்" என்று கடுமையாக திட்டினார்.
இதற்கு பதிலளித்த ஓரினச்சேர்க்கையாளர்கள், "நீங்கள் தான் எங்களுடைய சுதந்திரத்தில் தலையிடுகிறீர்கள். நீங்கள் மிகப்பெரிய இனவெறியராக தோற்றமளிக்கிறீர்கள்" என்று பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை பிற பயணிகள் வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்தனர். இதற்கு திட்டிக் கொண்டிருந்த பெண்மணி கடுமையாக ஆத்திரமடைந்தார். வீடியோ எடுத்தவர்களையும் சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார்.
அந்த இரு ஓரினச்சேர்க்கையாளர்களும் தங்களை பொது இடத்தில் அவமானப்படுத்திய குற்றத்திற்காக அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது பார்சிலோனா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.