கிறிஸ்டியனாக மாறமாட்டேன்! திருமணத்தை பதிவு செய்யமாட்டேன்! பீட்டர் பாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வனிதா!

நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டுள்ள பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் புகார் அளித்து தொடர்பாக நடிகை வனிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பிரபல பிக் பாஸ் நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் இவர்களின் திருமணம் கடந்த 27ஆம் தேதி நடிகை வனிதாவின் வீட்டில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிதாக நடைபெற்றது. கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி கடந்த 19ம் தேதி வடபழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எனது கணவர் என்னை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று புகார் அளித்திருந்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் நடிகை வனிதா இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் நான் கடந்த காலங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளேன் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு குழந்தைகளுடன் நீண்ட காலமாக தனிமையில் கஷ்டப்பட்டு இருந்த எனக்கு முடிவாக தற்போது தான் உண்மையான அன்பும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது.

பீட்டர் பால் ஒரு அன்புமிக்க நல்ல மனிதர். என்னுடைய புகழைக் கெடுப்பதற்காகவும், எங்களிடம் இருந்து பணம் பறிப்பதற்காக இதுபோன்ற செயல்களில் பிறர் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 7 வருடங்களாக யாருடைய அன்பும் கிடைக்காமல் இருந்த பீட்டர் பாலை நான் சந்தித்துள்ளேன். அவரது பெயரைக் கெடுப்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. யாருடைய குடும்பத்தையும் நான் பிரிக்கவில்லை. பிரிக்கவும் மாட்டேன்.

பீட்டர் பாலம் நானும் கடவுளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் கிறிஸ்டியனாக நான் மாறவில்லை. எங்களுடைய திருமணத்தை நாங்கள் பதிவும் செய்யவில்லை. நாங்கள் இருவரும் காதலித்ததை தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் அந்த பதிவில் நடிகை வனிதா குறிப்பிட்டுள்ளார்.