வனிதாவுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இடையிலான வீடியோ தகராறுதான் இன்றைய தேதியில் தமிழகத்தின் ஹாட்.
வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டையை குழாயடி சண்டைனு சொல்லாதீங்க..
அந்த ஆக்ரோஷ் வனிதாவின் அத்தனை கெட்ட வார்த்தை திட்டுகளையும், அத்தனை திட்டுகளையும் வாங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே இருந்த லட்சுமி ராமகிருஷ்ணனை கிட்டத்தட்ட அத்தனை தமிழகமும் பார்த்துரசித்து விட்டது.
வனிதாவுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இடையிலான வீடியோ தகராறுதான், இன்றைய தேதியில் தமிழகத்தின் ஹாட். அந்த ஆக்ரோஷ் வனிதாவின் அத்தனை கெட்ட வார்த்தை திட்டுகளையும், அத்தனை திட்டுகளையும் வாங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே இருந்த லட்சுமி ராமகிருஷ்ணனை கிட்டத்தட்ட அத்தனை தமிழகமும் பார்த்துரசித்து விட்டது.
ஆனால், கொழாயடிச் சண்டை, சேரி புத்தின்னு.. பேசுவதை கண்டிக்க வேண்டியது எங்கள் கடமை என்று இயக்குனர் கவிதா பாரதி உரிமைக் குரல் கொடுத்துள்ளார். பணக்காரர்களின் பங்களாக்களுக்கு மாநகராட்சி நேரடியாக குழாய் பதித்து குடிநீர் வழங்குகிறது. உங்கள் அலங்காரப் பூந்தோட்டத்திற்கான தேவைக்கும் அவை தாங்கும்.ஆனால் உழைக்கும் மக்களின் குடிசைப்பகுதிகளுக்கு..?
ஆயிரம் வீடுகள் கொண்ட குடியிருப்பு, ஒரு வீட்டிற்கு ஒரு நாளைக்கு இருபது குடம் தேவையென்றால் ஒரு நாளைக்குத் தேவை 200000 குடம். ஆனால் வழங்கப்படுவது இதில் பத்தில் ஒரு பங்கு.அதுவும் வாரத்தில் ஒரு முறையோ, இருமுறையோ, காரணம் அவர்கள் அடிப்படைத் தேவைபற்றிய அலட்சியம்..
நியாயமாக சமூகசேவகர் வேசம் கட்டுபவர்கள் இவர்களுக்காகத்தான் குரல் கொடுக்க வேண்டும், இவர்களுடன் நின்று போராட வேண்டும். ஆனால் நீங்கள் உங்கள் யூட்யூப் அவதாரங்களில் சம்மந்தமேயில்லாமல் குழாயடிச்சண்டை என்று உழைக்கும் மக்களைக் கேவலப்படுத்துகிறீர்கள்.
விரிவாகச் சொல்ல நிறைய இருக்கின்றன.இப்போதைக்கு ஒன்றே ஒன்று..நீங்கள் உங்கள் சண்டைகளில் ஆங்கிலத்தில் உதிர்க்கும் வசவுச்சொற்களைவிடவும் எங்கள் சேரிமக்களின் 'குழாயடிச் சொற்கள்' நாகரீகமானவை என்று கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அடுத்த லைவ்வில் கவிதாபாரதியை மீட் செய்வாரா வனிதா?