தனுஷ் வந்து அமலா பாலை கூட்டிட்டு போனது தான் விவாகரத்துக்கு காரணம்..! மாமனார் வெளியிட்ட பகீர் தகவல்!

இயக்குனர் விஜய் மற்றும் நடிகர் அமலா பால் விவாகரத்து செய்ததற்கு முக்கிய காரணம் நடிகர் ஒருவர் தான் என்று இயக்குனர் விஜய்யின் தந்தை ஏ எல் அழகப்பன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.


நடிகர் அஜித், விஜய் ,விக்ரம் ஆகிய முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கியவர் இயக்குனர் விஜய் ஆவார். இவர் தற்போது நடிகை கங்கனா நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும் படமான தலைவி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் திருமணம் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் விஜய்யும் தனது இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டார். நடிகை அமலாபாலும் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பல்வேறு திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் தற்போது இயக்குனர் விஜய்யின் தந்தை ஏ எல் அழகப்பன் நடிகை அமலா பாலும் தனது மகன் இயக்குனர் விஜய்யும் விவாகரத்து செய்ததற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் தான் என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த நடிகை அமலாபாலை அம்மா கணக்கு திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் அணுகி அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகுதான் பிரச்சினைகள் பெரிதாகி நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர் என்று இயக்குனர் விஜய்யின் தந்தை ஏ எல் அழகப்பன் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தானது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.