தினமும் வெறி நாய்க் கடி பற்றி செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நேற்று புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை 5 இடங்களில் நாய் கடித்துக் குதறியிருக்கிறது. முன்பு நாய் திடீரென கடித்துவிட்டு ஓடிவிடும். ஆனால், இப்போது கடித்துக் குதறுகிறது. ஏன்?
எகிறும் வெறி நாய்க் கடிக்கு தீர்வு என்ன?
தினமும் வெறி நாய்க் கடி பற்றி செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நேற்று புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை 5 இடங்களில் நாய் கடித்துக் குதறியிருக்கிறது. முன்பு நாய் திடீரென கடித்துவிட்டு ஓடிவிடும். ஆனால், இப்போது கடித்துக் குதறுகிறது. ஏன்?
உலகிலேயே ரேபிஸ் நோயால் உயிரிழப்பவர்கள் இந்தியாவில்தான் அதிகம் என்கிறார்கள். அந்த அளவுக்கு வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மனிதர்களின் துணையைவிட நாய் நல்ல துணை என்று நம்புகிறார்கள். ஆனால், வெளிநாட்டு நாய்களை வளர்க்கத் தெரியாமல் கட்டிப் போட்டு வளர்க்கிறார்கள். நாய் வளர்ப்பு என்பது அந்தஸ்தைக் காட்டுவதாக மாறியிருக்கிறது.
தெருநாய் மனிதர்களைக் கடிப்பது மட்டுமல்ல, பெரும்பாலான வாகன விபத்துக்கும் முக்கிய காரணமாகிறது. இதனால் உயிர் இழந்தவர்கள் மற்றும் கை, கால் இழந்தவர்கள் எண்ணிக்கை தனியே கண்டறிய முடியவில்லை என்றாலும் அதிகம்.
கட்டிப் போட்டு மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கும் இந்த நாய்கள் ரோட்டுக்கு வந்ததும் எதையாவது கடிக்கலாமா என்று திரிகிறது. அதேபோல் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. தெரு நாய்களுக்கு உணவு போடுவதற்கு என்று ஒரு கூட்டமும் அதிகரித்துவருகிறது.
தெருநாய்களை கொல்ல வேண்டும், கருத்தடைசெய்ய வேண்டும் என்பதெல்லாம் சரியான தீர்வுகள் அல்ல. அதேபோல் எல்லா நாய்களுக்கும் ஊசி போட்டு ஆரோக்கியமாக வைத்திருப்பதும் சாத்தியம் அல்ல.
முதலில் வெளிநாட்டு நாய்களை இங்கு வளர்ப்பதை தடுக்க வேண்டும். ஸ்பானியல், அல்சேஷன், ராட்வைலர், ரொடீஷியன் ரிட்ஜ்பேக், கோல்டி, ஹஸ்கி போன்ற நாய் இனங்கள் இந்தியாவில் வளர்ப்பதற்கு தடை போட வேண்டும். தடை போடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றால் வளர்ப்பதற்கு கடுமையான வரி விதித்து இன்சூரன்ஸ் போட வேண்டும். இந்த நாயினால் கடிபடுபவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு இருத்தல் வேண்டும். அதோடு அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.
இந்திய நாய் இனங்கள் மட்டுமே வீட்டில் வளர்க்க ஏற்றவை. இதற்கு குறைவான வரி விதிக்கலாம். ரோட்டில் எந்த நாயும் திரியக்கூடாது. இதனை கடைபிடித்தால் நாய் தொல்லையிலிருந்து மீள முடியும்.