சவுக்கு சங்கர் கையை உடைச்சது யாரு..?

மதுரை நீதிமன்றத்துக்கு அவர் ஆஜராக வந்த நேரத்தில் சவுக்கு சங்கர் கையில் கட்டு போடப்பட்டிருந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய நேரத்தில் எதுவும் பேசாமல் கடந்து சென்றார். இது, சவுக்கு சங்கர் ஆதரவாளர்களை அதிகம் அச்சமூட்டியுள்ளது.


மதுரை நீதிமன்றத்துக்கு அவர் ஆஜராக வந்த நேரத்தில் சவுக்கு சங்கர் கையில் கட்டு போடப்பட்டிருந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய நேரத்தில் எதுவும் பேசாமல் கடந்து சென்றார். இது, சவுக்கு சங்கர் ஆதரவாளர்களை அதிகம் அச்சமூட்டியுள்ளது.

காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவரை கோவை போலீஸார் மே 5ம் தேதி கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் காரில் சோதனையிட்ட பழனிசெட்டிபட்டி போலீஸார் காரில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சங்கருடன் தேனி விடுதியில் தங்கியிருந்த ராஜரத்தினம், அவரது ஓட்டுனர் ராம்பிரபு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரையும் பழனிசெட்டிபட்டி போலீஸார் கைது செய்தனர். கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை போலீஸார் மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று ஆஜர்படுத்தினர்.

அப்போது சங்கர் வலது கையில் கட்டுப்போட்டிருந்தார். அவரிடம் நீதிபதி வழக்கு குறித்து என்ன சொல்கிறீர்கள்? என கேள்வி கேட்டார். அதற்கு சங்கர், “இது பொய் வழக்கு. கோவை சிறையில் என்னை போலீஸார் கடுமையாக தாக்கினர். இதில் எனக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கோவை சிறையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கோரிக்கை தொடர்பாக மனு அளித்தால் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும், எனக் கூறி, சங்கரை மே 22 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரம், ‘’நாங்கள் சவுக்கு சங்கரை தாக்கவே இல்லை. கோவைக்கு வரும் வழியில் விபத்து நடந்த நேரத்தில் அவருக்கு கையில் முன்பு பிளேட் மாட்டப்பட்ட இடத்தில் வலி இருப்பதாகக் கூறியதால் கையில் கட்டு போட்டிருக்கிறார்’’ என்கிறார்கள்.

சவுக்கு சங்கருக்கு கை உடைக்கப்பட்டது மட்டுமின்றி கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை வெளியே சொன்னால் மீண்டும் சிறைக்குத் திரும்பிய பிறகு பூஜை நடக்கும் என்று சொன்னதாலே பத்திரிகையாளர்களிடம் வாயைத் திறக்கவில்லையாம்.