திருமணம் முடிந்தவுடன் மணப்பெண் குரூப்-4 தேர்வு எழுத வந்த சம்பவமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கட்டிய தாலியோடு பரீட்சை எழுத எக்ஸாம் ஹாலுக்கு வந்த புதுமணப்பெண்!
ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் ஜீவிதா. ஜீவிதாவின் வயது 23. சிவகிரியை சேர்ந்தவர் அம்பிகா சுந்தரமூர்த்தி. இவருடைய மகனின் பெயர் சதீஷ்குமார்.
இவருடைய வயது 26. இருவீட்டு பெற்றோரின் சம்மதத்துடன் இவ்விருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயிக்கப்பட்டது போல நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் கொடுமுடி அருகேயுள்ள ஒத்தக்கடையிலுள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தவுடனே அவர் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதுவதற்காக சிவகிரி புறப்பட்டார். சிவகிரியில் உள்ள எஸ்.எஸ்.சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மற்றவர்களுடன் அமர்ந்து ஜீவிதா தேர்வு எழுதினார்.
தேர்வு முடிந்தவுடன் ஜீவிதாவுக்கு மையத்தில் இருந்த தேர்வெழுத வந்தோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த சம்பவமானது வந்த பள்ளி வளாகத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.