தேர்தல் நேரத்தில் புலிப் பாய்ச்சலில் களம் இறங்குவதுதான் ஜெயலலிதா பாணி. அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட தாக்கல் செய்த 8 ஆயிரத்து 967 பேருக்கும் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.
நீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 9 பேர் கொண்ட குழு நேர்காணலை நடத்துகிறது. வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் மாவட்ட வாரியாக அமர வைக்கப்பட்டனர்.
யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தற்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்டும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
நேர்காணலில் அவை தலைவர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விருப்ப மனு அளித்தவர்களை குழுக்களாக பிரித்து நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முதல்கட்டமாக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று ஒரே நாளில் நேர்காணலை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. தேர்தலுக்கு அதிக நாட்கள் இல்லை என்பதால், ஒரே நாளில் நேர்காணல் முடிக்கப்பட்டு, தேர்தலுக்குத் தயாராகிறது அ.தி.மு.க. என்பது தான் முக்கியமான விஷயம்.