வயிற்று வலியால் துடித்த மகள் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அதிர்ச்சி சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது.
வயிறு வலிப்பதாக துடித்த மகள்! அக்கறையாக மருத்துவமனை அழைத்துச் சென்ற தாய்! அங்கு டாக்டர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்!
விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி எனும் பகுதி அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சித்தலகுண்டு கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் இளம்பெண் ஒருவர் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே கிராமத்தில் பிறந்த ஜெயபால் என்பவரின் மகனான அடைக்கலம் பக்கத்து கிராமத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இதனிடையே இவ்விருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வீட்டிற்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். வயது வரம்பை மீறி இருவரும் உடலுறவை அனுபவித்தனர்.
சில மாதங்கள் கழித்து அந்த பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோர் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதை கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போதும் அந்த பெண் கர்ப்பத்திற்கான காரணத்தை பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. உடனடியாக பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன்னுடைய கர்ப்பத்திற்கு அடைக்கலம் என்ற இளைஞர் காரணமாவார் என்பதை கூறியுள்ளார்.உடனடியாக காவல்துறையினர் அடைக்கலத்தை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவமானது தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.