டூட்டி முடிந்து ஸ்கூட்டியில் வீடு திரும்பிய நர்ஸ்..! டேங்கர் லாரியால் சடலமான பரிதாபம்..! சென்னை டூ பாவூர் சத்திரம்..!

ஆயுதப்படை பிரிவில் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்த 22 வயது பெண் லாரி டயர் சிக்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் இன்றுவரை 6,009 பேர் இந்த கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1,400 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் 25-ஆம் தேதி முதல் இன்றுவரை ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. 

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக காவல் துறை பணியாளர்கள் மிகவும் ரிஸ்க் எடுத்து பொதுவெளியில் தங்களுடைய பணிகளை செய்து வருகின்றனர். தேவையில்லாமல் வெளியே சுற்றும் மக்களை கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,93,463 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,16,344 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக 4,15,73,819 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை ஆயுதப்படை பிரிவு காவலர் பவித்ரா நேற்று சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவமானது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவித்ராவின் வயது 22. இவர் விடைத்தாள் கார்ட்டாக பணியாற்றி வந்தார். இவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் என்ற பகுதிக்கு உட்பட்ட மேல்அரியாபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். நேற்று சாந்தோம் பகுதியில் பணியில் இருந்துள்ளார். பணி முடிந்த பின்னர், குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். காமராஜர் சாலை - பாரதி சாலை சந்திப்பை அடைந்தபோது வலது பக்கமாக பவித்ரா இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளார்.

அப்போது மேடவாக்கத்தில் இருந்து தண்டையார்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த பாமாயில் லாரி அவர் மீது மோதியுள்ளது. மேலும் லாரியின் சக்கரங்களில் பவித்ரா சிக்கிக்கொண்டு இழுத்து செல்லப்பட்டார். அதிபயங்கர சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பவித்ராவையும், இருசக்கர வாகனத்தையும் மீட்டெடுத்தனர்.

பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக பவித்ராவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக அவருடைய குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பிணவறையில் அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனை முறைகள் முற்றிலுமாக முடிந்த பின்னர் பாவூர்சத்திரத்தில் உள்ள குருசாமிபுரத்திலுள்ள அவருடைய சொந்த வீட்டிற்கு உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கிருந்து அவருடைய சொந்த ஊரான மேல்அறியாபுரத்திற்கு இறுதி சடங்கிற்காக உடல் தூக்கி செல்லப்பட்டது.

அங்கு போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு,நெல்லை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஆகியோர் மலர் தூவி பவித்ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் பவித்ராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் ராஜசேகர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.