பைப்பை தவறான இடத்தில் சொருகிய மோகன பிரியா! திருமணம் ஆன 4 மாதத்தில் அவருக்கு வீட்டுக்குள் நேர்ந்த பயங்கரம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 4 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்திபலகானூர் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவர் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியில் பி.ஏ. 3ம் ஆண்டு படித்து வரம் மோகன பிரியா என்ற மாணவியை காதலித்து வந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கல்லூரிகள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளதால் மோகன பிரியா கணவர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை கணவர் சிவா, மாமனார் செந்தில், மாமியார் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர்.

அப்போது வீட்டு தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மோட்டாரை ஆன் செய்ய பிளக் சொருகி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் அலறியதை பார்த்த அக்கம் பக்கத்தினரை அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மோகன பிரியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மோகன பிரியாவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.

இதை அடுத்து கிராம மக்கள், உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர் மோகன பிரியாவின் மரணம் குறித்து நாமக்கல் உதவி ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் விசாரணை நடத்தினர். திருமணமான 4 மாதங்களில் கல்லூரி மாணவி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தண்ணீர் பைப்பில் இருந்து தொட்டிக்கு தண்ணீரை ஏற்ற மின்சார பிளக்கை போட்டுவிட்டு, பைப்பை மோட்டாரில் சொருகியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது.