பாகிஸ்தானை சேர்ந்த நகைச்சுவை நடிகர் அஷ்ரப் ரயி காலமானார்
திடீர் மாரடைப்பு..! பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்! ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தானை சேர்ந்த அஷ்ரப் ரஹி இந்தியாவில் பஞ்சாபி மொழி படங்கள் பலவற்றில் நகைச்சுவை வேடத்தில் முத்திரை பதித்தவர். பாகிஸ்தானில் 3,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தவர். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட அஷ்ரப் திரையில் பேசும் வசனங்கள் பிரபலம் அடைந்தன. என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் இறுதி காலத்தில் நிதி நெருக்கடியால் தன்னை குணப்படுத்த முடியாமல் கூட கஷ்டப்பட்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அஷ்ரப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடைசி காலத்தில் மருத்துவ உதவி வேண்டும் என முந்தைய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார் அஷ்ரபி ரஹி. ஆனால் அவருக்கு எந்த உதவியும் அரசிடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை. மேலும் அஷ்ரப் ரஹி தனது பிறந்த தினமான டிசம்பர் 25 அன்றே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய ஷர்த்யா மைட், சாவ சாயிர், அஷிகோம் காம் நா கர்ணா, பாரா மாசா யே கா மற்றும் டபுள் சவாரி போன்ற நாடகங்கள் மக்களின் வரவேற்பை பெற்றன. மேலும் அஷ்ரப் அலி பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார். டிசம்பவர் 25ம் தேதி உயிரிழந்த அஷ்ரப் ரஹியின் இறுதிச் சடங்கு டிசம்பவர் 26ம் தேதி நடைபெற்றது.