நடிகர் கமலஹாசன் இந்த வாரம் டாய்லெட் கிளீனர் விளம்பரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அப்பாஸ், கணேஷ் வெங்கட்ராமன் பிழைப்பில் மண்! அந்த விளம்பரத்தில் நடிக்கும் கமல்!
கமலஹாசன் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு உயரிய நடிகர் என்றால் அது மிகையில், தனது படங்களிலும் அவற்றின் கதைகளில் புதுமைகளை புகுத்தியும், புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்தும் தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர் என்றாலும் மிகையில்லை
2017-ஆம் ஆண்டு முதல் அவரது பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களை கவர்ந்து வரும் நிலையில் விரைவில் மூன்றாம் கட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியும் விரைவில் சின்னத் திரையை ஆக்கிரமிக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் அவர் டாய்லெட் க்ளீனர் விளம்பரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது வழக்கமான விளம்பரமாக இருக்காது என்றும், மக்களிடையே சுத்தத்தை வலியுறுத்தும் வகையிலான ஒரு மேம்பட்ட விளம்பரப் படைப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல் போத்தீஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார். புதிதாக அரசியல் அவதாரம் எடுத்துள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அதிக நிதி தேவைப்படுவதால் அவர் இது போன்ற படைப்புகளை எடுத்து நடிப்பதாகக்கூறப்படுகிறது.
இதனிடையே அவர் நடிக்கும் இந்தியன் 2 படமும் விரைவில் வெளிவர உள்ளது. முன்னதாக ஹார்பிக் விளம்பரத்தில் நடிகர் அப்பாஸ் நடித்துள்ளார். பிறகு பிக்பாஸ் மூலம் புகழ் அடைந்த கணேஷ் வெங்கட்ராம் ஹார்பிக் விளம்பர தூதுவர் ஆனார். தற்போது கமல் இந்த விளம்பரத்தில் நடிக்க உள்ளார். இதற்கு பெரிய தொகை பேசப்பட்டுள்ளதால் தான் கமல் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.