அந்த நடிகர் அவர் மகளையும் விட்டு வைத்திருக்க மாட்டார்! இளம் நடிகை பகீர் செக்ஸ் புகார்!

மலையாள திரையுலத்தில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருப்பவர் சித்திக். இவர் என்னிடம் ஒரு பிரிவியூ ஷோவில் படம் பார்க்கையில் ஆபாசமாக பேசி அத்துமீறி நடந்துகொண்டார் என நடிகை ரேவதி கூறியுள்ளார்.


மேலும், ‘அட்ஜஸ்ட்மெண்டுக்கு தயாரா? என ஒப்பனாக கேட்டதாக நடிகை ரேவதி சம்பத் திடீரென குற்றம் சாட்டியுள்ளார். ரேவதி இன்று அவரது பேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவில், "அது 2016ம் வருடம். நிலா என்கிற பிரிவியூ ஷோ நடக்கும் திரையரங்கில் நடிகர் சித்திக்குடன் ‘சுகமாயிருக்கட்டே’ பிரிவியூ ஷோ பார்க்க சென்றேன்.

அப்போது, மெல்ல என்னிடம் பேசியபடி, ஹோட்டலுக்கு வர சொல்லி வற்புறுத்தினார். எதற்கு என கேட்டதற்கு அட்ஜஸ்மெண்ட் பண்றியா? என கேட்டு, ஆபாச வார்த்தைகளால் சீண்டினார். எனக்கு அச்சமயம் வெறும் 16 வயது தான். சரியாகச் சொன்னால் அவருடைய மகள் வயது. இதைப் பற்றி இப்போது நான் இங்கு பேச காரணம்,

கேரளா நடிகர் சங்கத்தில் உத்தமன் போல பேசியது ஆத்திரமாக இருந்தது. இதற்கு சற்றும் தகுதி இல்லாதவர். இந்த காமகொடுரனிடம் இவரது மகள் பாதுகாப்பா உள்ளாரா? என்ற கேள்வியும் எழுப்பினார். இதற்கு சித்திக் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. ரேவதியின் இந்த பதிவுக்கு பலரும், பிரபலமாக இவ்வாறு செய்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.