ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது லக்! ஜேசன் போர்ன் படத்தின் அடுத்த பார்ட்டில் நடிக்கிறார்!

‌ஹாலிவுட்டுக்கு செல்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.


உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தனுஷுடன் 3, அஜித்துடன் வேதாளம், விஷாலின் பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மிகப் பெரிய நடிகரின் மகள் என்று இல்லாமல் இவர் தனது திறமையை நிரூபித்து திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

டோலிவுட் பாலிவுட் கோலிவுட் என அனைத்து திரை உலகிலும் ஜொலித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஹாலிவுட் வாய்ப்பு கதவை தட்டி உள்ளது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வின் ஏஜென்ட் ஜேசன் போர்னே தொடர்பான தொடரில் அவர் நடிக்க உள்ளார். ட்ரெட் ஸ்டோன் என் அந்த தொடரில் 

நீரா பட்டேல் என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். டெல்லியில் உள்ள நட்சத்திர உணவகத்தில் பணிபுரிந்துகொண்டே திட்டமிட்டு கொலைகளை அரங்கேற்றம் ஏஜென்ட் வேடத்தில் அவர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் நடைபெறும் படப்பிடிப்பு விரைவில் அவர் இணைய உள்ளார். இந்தத் தொடர் கடந்த ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழில் தற்போது ஸ்ருதிஹாசன் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தீபிகா படுகோனே பிரியங்கா சோப்ரா தனுஷ் ஆகியோருக்குப் பிறகு ஹாலிவுட்டில் கால் எடுத்து வைக்கும் இந்திய நட்சத்திரம் என்ற பெருமையை ஸ்ருதிஹாசன் பெற்றுள்ளார்.