கணவனுடன் படுக்கையில் நெருக்கம்! போட்டோவை வெளியிட்ட நடிகை!

கணவனுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு நடிகை ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


பிரபல இந்தி நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இவர் தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான ராஞ்சனா படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இந்தியில தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு தொழில் அதிபர் ஆனந்த் அகுஜாவை சோனம் கபூர்திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு லண்டனில் ஒரு வீடு உள்ளது.

   மும்பையில் சில நாட்கள், லண்டனில் சில நாட்கள் என்று சோனம் கபூர் தனது கணவருடன் பொழுதை கழித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென படுக்கை அறையில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சோனம் கபூர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனது கணவருடன் படுக்கையில் இருக்கிறார் சோனம் கபூர். உள்ளாடைகள் தெரியும் அளவிற்கு உடைகள் கலைந்த நிலையில் சோனம் கபூர் இருக்கும் நிலையில், அவரது கணவர் அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்.

   எதற்காக சோனம் கபூர் இந்த புகைப்படத்தை வெளியிட்டார் என்று சமூக வலைதளங்களில் ஒரு பட்டிமன்றமே நடைபெற்று வருகிறது. தான் இப்படி கொத்தும் குழையுமாக உட்கார்ந்திருக்கு நிலையில் தனது கணவரை பாருங்கள் எப்படி தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிவிக்கவே சோனம் இந்த புகைப்படத்தை வெளியிட்டதாக கிசுகிசுக்கள் எழுந்தன. மேலும் ரசிகர்கள் சிலர் தான் வேண்டுமானால் அங்கு வரட்டுமா என்று ஆபாசமாக கமென்ட் அடிக்க ஆரம்பித்தனர்.

   இதனை தொடர்ந்து காலையில் எழுந்ததும் தான் மிகவும் சோம்பலாக உணர்ந்ததாகவும் அதனை அனைவருக்கும் தெரிவிக்கவே இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டதாகவும் சோனம் கபூர் விளக்கம் அளித்தார். அத்துடன் அந்த புகைப்படத்தையும் சோனம் அழித்துவிட்டார். இந்த புகைப்படம் மூலம் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை என்று கூட கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.