டெல்லி: சகோதரி குஷியை கட்டியணைத்து வரவேற்ற ஜான்வி கபூரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
என்னதான் தங்கச்சியா இருந்தாலும்..? உள்ளாடை தெரியும் வகையிலா? வைரலாகும் பிரபல நடிகையின் மகள்கள் புகைப்படம்!
உயர் கல்விக்காக, நடிகை ஜான்வி கபூரின் சகோதரி குஷி, கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க் சென்றிருந்தார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், குஷி தற்போது மும்பை வந்துள்ளார். அவரை தந்தை போனி கபூர், விமான நிலையம் சென்று வரவேற்றிருந்தார்.
இதன்பின் வீடு வந்து சேர்ந்த குஷியை, அக்கா ஜான்வி கபூர், கட்டித் தழுவி உற்சாகத்துடன் வரவேற்றார். நீண்ட நாளாக தங்கை இல்லாமல் தனிமையில் வாடிய ஜான்வி கபூர், தனது சகோதரியை கட்டிப்பிடித்து வரவேற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல, சில நாட்கள் முன்பாக, நியூயார்க் சென்றிருந்த ஜான்வி கபூர் அங்கு தந்தை போனி கபூருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.