அதிமுக வேட்பாளர் பட்டியல் நள்ளிரவு நேரத்தில் திடீரென வெளியிடப்பட்டுள்ளது.
தேனியில் ஓபிஎஸ் மகன்! தென் சென்னையில் ஜெயக்குமார் மகன்! நள்ளிரவில் வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியல்!
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு தேனி தொகுதியிலும் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனுக்கு தென் சென்னையிலும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியனுக்கு நெல்லை தொகுதியும், மதுரையில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனுக்கும் எம்பி சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளும் அதன் வேட்பாளர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைதேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன்னர் வெளியீடு.
இதன் விவரம் வருமாறு மக்களவை வேட்பாளர்கள்
திருவள்ளூர் – வேணுகோபால்
தென்சென்னை – ஜெயவர்தன் (ஜெயக்குமார் மகன்)
காஞ்சிபுரம் – மரகதம் குமரவேல்
கிருஷ்ணகிரி – கே.பி.முனுசாமி
திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஆரணி – செஞ்சி ஏழுமலை
சேலம் – கேஆர்எஸ் சரவணன்
நாமக்கல் – பி.காளியப்பன்
ஈரோடு – வெங்கு என்ற மணிமாறன்
திருப்பூர் – எம்.எஸ்.எம்.ஆனந்தன்
நீலகிரி – தியாகராஜன்
பொள்ளாச்சி – சி.மகேந்திரன்
கரூர் – மு.தம்பிதுரை
பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி
சிதம்பரம் – போ.சந்திரசேகர்
மயிலாடுதுறை – எஸ்.ஆசைமணி
நாகை – தாழை.மா.சரவணன்
மதுரை – விவிஆர்.ராஜ் சத்யன் (ராஜன் செல்லப்பா மகன்)
தேனி – ப.ரவீந்திரநாத் குமார் (ஓ.பி.எஸ் மகன்)
நெல்லை – பி.எச்.மனோஜ் பாண்டியன் (பி.ஹெச்.பாண்டியன் மகன்)
சட்டசபை இடைதேர்தல் வேட்பாளர்கள்:
பூந்தமல்லி – ஜி . வைத்தியநாதன்
பெரம்பூர் – ஆர்.எஸ்.ராஜேஷ்
திருப்போரூர் – எஸ்.ஆறுமுகம்
சோளிங்கர் – ஜி.சம்பத்
குடியாத்தம் (தனி) – ஆர்.மூர்த்தி
ஆம்பூர் – ஜோதி ராமலிங்க ராஜா
ஓசூர் – ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி
பாப்பிரெட்டிபட்டி – கோவிந்தசாமி
அரூர்(தனி) – வி.சம்பத்குமார்
நிலக்கோட்டை (தனி) – எஸ்.தேன்மொழி
திருவாரூர் – ஆர். ஜீவானந்தம்
தஞ்சாவூர் – ஆர். காந்தி
மானாமதுரை(தனி) – எஸ்.நாகராஜன்
ஆண்டிபட்டி – லோகிராஜன்
பெரியகுளம்(தனி) – எம்.முருகன்
சாத்தூர் – எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்
பரமக்குடி(தனி) – என். சதன்பிரபாகர்
விளாத்திகுளம் – சின்னப்பன்