இப்போது இணையதள வைரல் முனைவர் வேங்கட கிருஷ்ணன்தான்.
பார்ப்பனர்தான் உயர்ந்தவர்! நாய்களில் கூட உயர் ரகம் உண்டு! வெறிபிடித்த வேங்கடகிருஷ்ணன் விஷமப் பேச்சு! தூக்கி ஜெயில்ல போடுங்க சார்!

நாய், குதிரை போன்றவற்றில் உயர்வு, தாழ்வு என இருப்பது போன்று மனிதர்களிலும் உள்ளது என்று மிகத் தைரியமாக மேடையில் ஏறி பேசியிருக்கிறார். வீட்டில் வளர்க்கும் பாமனேரியன் நாய்க்கும், வேட்டை நாய்க்கும் வித்தியாசம் உண்டு என்பது போன்று, மனிதர்களிலும் உண்டு என்கிறார். இந்துக்களிலே பார்ப்பனர்கள்தான் மிகவும் உயர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் பேசுகின்றார்.
இவர் வருணசிரம தர்மத்துக்கு வக்காலத்து வாங்குவதால் இந்திய சட்டத்தை மதிக்கவில்லை என்று தெரிகிறது. மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் உறுதியான விளக்கம். ஆனால், இவரோ தாங்கள் உயர் பிறப்பு என்றும் மற்றவர்களை மோசமான நாய்கள் என்று விளக்கம் கொடுக்கின்றார்.
பிறப்பால் ஒரு மனிதன் எப்படி ஏற்றத் தாழ்வுகள் உடன் பிறக்க முடியும் என்று கேட்பவர்கள் சூத்திரர்கள் என்றும், அப்படித்தான் பேசுவார்கள் என்றும் சொல்கிறார். அதாவது, அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் மீண்டும் ஒரு முறை கேவலப்படுத்துகிறார். பொது மேடையில் மக்களை இனம் பிரித்து திட்டவட்டமாகப் பேசுவது எத்தகைய குற்றம்? ஆனால், இவரை எதிர்த்து எந்த மனித உரிமை அமைப்புகளும் சுட்டுவிரல்கூட நீட்டவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
இவர் உயர்ந்த ஜாதி நாயாகவே இருந்துவிட்டு போகட்டும், மற்றவர்களை எப்படி நாய் என்று சொல்வதற்கு இவருக்கு உரிமை இருக்கிறது. மனிதர்கள் சமம் அல்ல என்று சொல்லக்கூட நாய்களையும் குதிரைகளையும் உதாரணம் சொல்பவர்கள் சகமனிதர்களையும் அப்படித்தானே பார்ப்பார்கள்? இவரைப் போன்ற வெறி பிடித்தவர்களை வெளியே உலவ விடுவதே தவறு, பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.