அறிவாற்றலில் ஐன்ஸ்டீனுக்கு சவால் விடும் தெறி பேபி ஆத்மிகா.! சாதனை சிறுமியின் தாயாக நெகிழும் நியுஸ் ரீடர் ஹேமா!

ஒரு பெற்றோரா ரொம்ப சந்தோஷமா இந்த தருணத்துல உணர்கிறோம் என்று இந்த கட்டுரையை எழுதியுள்ளார் நியுஸ் ஜே தொலைக்காட்சியின் நியுஸ் ரீடர் ஹேமா ராகேஷ்.


பிரசவத்துக்கு 10 நாள் முன்னாடி வர செய்தி வாசிச்சதுனால என்னவோ , எங்க பாப்பா பிறந்த 6 மாசத்துல இருந்து புத்தகங்கள் ல இருக்கிற பொம்மைகளை ஆர்வமா பாக்கிறது, பொருட்களை நியாபகம் வச்சு சொல்றது னு இருந்தாங்க. ஒரு பெற்றோரோட கடமையே பிள்ளைங்க எதுல ஆர்வமா இருக்குங்களோ அதுல வழிநடத்துறது தானே. ஏன்னா எங்க பெற்றோர்களும் அததான் எங்களுக்கு பண்ணாங்க.

பாப்பா ஆர்வமா படிக்குறாங்க னு தெரிஞ்சதும் பல புத்தகங்கள், தகவல்கள் , படங்கள் தொடர்பான சார்ட் னு வாங்கி விளையாட்டு வாக்குல எல்லாம் சொல்லிக்கொடுத்தோம். இப்ப வரைக்கும் எதையும் கட்டாய படுத்தி செய்யல. செய்யவும் மாட்டோம். முக்கியமா குழந்தை வளர்ப்பு னா அது பெண்ணுக்கு உரியது, தாய்மையின் பெருமையே அதுதான், பெண்ணா பிறந்ததே பிள்ளை வளர்ப்புக்கான பாக்கியம் னு எந்த Cinema Dialogue உம் இல்லாம குழந்தை வளர்ப்பு என்பது அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பு ங்கிறத மையப்படுத்தி இருக்கிறது தான் எங்க வீட்ல முக்கியமான விஷயம்.

இந்த வெற்றியில ஆத்மியின் தாத்தா , பாட்டியின் பங்கு அதிகம். குழந்தை பிறந்ததும் வேலையை விட்றுனு பல பேர் சொல்ல, உனக்கு னு தனி அடையாளம் வேணும்னு என் வேலையில ஊக்கப்படுத்தினதோட , பிள்ளை வளர்ப்புல ரோல் மாடலாகவும் இருக்காங்க.எந்த மாற்றத்த நாம விரும்புறோமோ அதை நம்ம கிட்ட இருந்து தானே ஆரம்பிக்கனும். அடுத்த தலைமுறை எப்படி இருக்கனும்னு நாம விரும்புறோமோ அந்த நல்ல மாற்றத்தை நம்ம குடும்பத்தில இருந்து தொடங்கனும்னு நினைக்கிறேன். உங்க எல்லோரின் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. நிறைய அன்பு.

நன்றி: ஹேமா ராகேஷ்