பெங்களூருள் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று கொஞ்சம் காதல், கொஞ்சம் ஆர்வம் 9 மணிநேரம் தூக்கம் இந்த தகுதி எல்லாம் இருந்தால் 1 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் வேலை என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1 நாளைக்கு 9 மணி நேரம் தூங்கினால் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்! பிரபல கம்பெனியின் அதிரடி வேலைவாய்ப்பு!
அவன் அவன் வேலை இல்லாமல் இருக்கன் ஊரை சுத்திட்டு இருக்கான், ஆனா பெங்களூருவை சேர்ந்த வேக் ஃபிட் (Wakefit) என்ற நிறுவனம் இந்த அசத்தலான வேலையை வாய்ப்பை அறிவித்துள்ளது.
அதுவும் வேலை வாய்ப்பு மட்டும் இல்லாமல், 100 நாட்களுக்கு வேலை, பஞ்சு மெத்தை, குளுகுளு ஏசியில் 9 மணிநேரம் தூங்குவது தான் உங்களுடைய வேலை என்று அறிவித்துள்ளது அந்த தனியார் நிறுவனம். இதுமட்டுமின்றி, தூங்குவதில் ஆசை, ஆர்வம், காதல் என இந்த தகுதிகள் எல்லாம் இருந்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகுதியின் அடிப்படையில், தேர்வாகும் நபர்கள் அந்த நிறுவனத்தின் மெத்தையில் 100 நாட்கள் தினமும் 9 மணிநேரம் தூங்க வேண்டும். அவர்களுக்கு நவீன உடற்பயிற்சி கருவிகள், ஸ்லீப் டிராக்கர், நிபுணர்களின் கவுன்சலிங் ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த நிறுவனம் தூங்குவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம், காதல் குறித்து வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும். இதுபோல் 100 நாட்கள் சிறப்பாக செய்து முடித்தால் அவர்களுக்கு 1 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை குறித்து தெரிவித்த அந்நிறுவனத்தின் இணை இயக்குநர், ‘தூக்கத்திற்கு தீர்வு காணும் நிறுவனமான நாங்கள், மக்களை நிம்மதியான தூக்கத்திற்கு ஊக்கவிப்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது அறிவிப்பா அல்லது அல்வா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும், மேலும், கிராமத்தில் உள்ள நூறு நாட்கள் வேலையா அல்ல பிக் பாஸ் போன்ற விளையாட்டுக்கான அறிவிப்பா? என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.