அதிக உதிரபோக்கால் அவதிப்படும் பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு சிறந்த தீர்வுகள் இதோ!

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம்.


ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய்கள், காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். இந்த பிரச்சனையை தீர்க்க சில சிறந்த இயற்கை வழிகள் இதோ:

இளம் வாழைப்பூவை அவித்து 30 மில்லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ணலாம். நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம். கால் ஸ்பூன் லவங்கப் பட்டைப் பொடியை எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்திப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல் போன்ற உணவுகளை அதிகம் உண்ணலாம்.

இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி என இந்த உணவுகளை சற்றே குறைத்து கொள்ளலாம்.