இந்த வார பிக் பாஸ் வீட்டில் வழக்கம் போல 6 பேர் எவிக்ஷனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் எனினும் அவர்களில் ஒருவர் தான வெளியேறுவார் என்பதினால் மீதமுள்ளவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
இந்த வாரமும் காப்பாற்றப்பட்ட மது! டென்சனில் சேரன் கொடுத்த செம ரியாக்சன்! பிக்பாஸ் வீட்டில் லகலக!
இதன்படி காப்பாற்றபடுபவர்களில் ஒருவர் நேற்றி சிறு சுற்றி விடும் விளையாட்டின் மூலம் அறிவிக்கபட்டர், ஒவ்வொருவராக மாட்ட மாட்ட, அதில் மதுமிதா காப்பாற்றபடுகிறார்.
இதனை அறிவிப்பதற்க்கு முன்னதாக ஆளுக்கு ஒரு ட்டாக் கொடுத்து அதை மற்றவர்களால் கைகளில் மாட்டிவிட சொன்ன போது சேரன் இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான் என நொந்துக்கொண்டார்,
அது அவர் மற்றவர்கள் முன்னிலையில் நாமினேஷன் செய்து விட்டு மற்றொரு பக்கம் அவர்களை காப்பாற்ற மக்கள் முன்னிலையில் ட்டாக் போடுவதெல்லாம் தேவையா என்ற பாணியில் சேரன் கேட்ட கேள்விகள் ,
பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது என்றாலும் கூட மற்றொரு பக்கம் மதுவுடனான சில சந்தர்ப்பங்களில் அவருக்கு உண்டான கருத்து வேறுபாடுகள் குறித்தும் இந்த டயலாக் சொல்லபட்டிருக்கலாம் என கூறலாம் .