போதை மருந்து கொடுத்து கட்டிய மனைவியை நண்பனுக்கு அனுப்பி வைத்த கணவன்!

அகமதாபாத்தில், வெளியூர் பயணத்தின் போது தனக்கு போதை மருந்து கொடுத்து நண்பர்களுடன் ஆசைக்கு அனுப்பி வைத்ததாக கட்டிய கணவன் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.


அகமதாபத்தில் கடோலியா பகுதியில் பெண் ஒருவர் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆறு மாதம் கழித்து இவரது கணவர், தனது நண்பர்கள் அவரது மனைவிகளை அவ்வபோது மாற்றிக்கொண்டு, மாற்றான் மனைவியுடன் உல்லாசமாக இருப்பர். தற்போது உன்மீதும் அவர்கள் ஆசைப்படுகிறார் என கட்டிய கணவனே அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

அதற்கு, அசவுகர்யமாக உள்ளது என கூறி தொடர்ந்து மறுத்துள்ளார் அந்த பெண். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், 18 பேர் நண்பர்கள் குழுவுடன் இந்த ஜோடியும் குளு மற்றும் மனாலி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது இந்த பெண்ணிற்கு கணவனே போதை மருந்தை கொடுத்து வேறு நண்பர்களுடன் உல்லாசத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், அதில் இன்னொரு பெண், நண்பருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்து, மீண்டும் மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார்.

இதனால், மனஉளைச்சல் அடைந்த பெண், மீண்டும் அகமதாபாத் வந்தவுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்று கணவன் மீது புகார் அளித்துள்ளார்.

விசாரணையில், அந்த நண்பர்கள் குழு இந்த பெண்ணின் பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை துவங்கி, இந்த பெண்ணின் புகைப்படங்களை பகிர்ந்து கிண்டலடித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.