ஒருதலை காதலால், கல்லூரி மாணவியை கடத்த முயன்ற கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு தர்மஅடி விழுந்துள்ளது.
சாலையோர பள்ளத்தில் சிக்கிய கார்..! உள்ளே இருந்து கதறிய இளம் பெண்..! எட்டிப் பார்த்த மக்களுக்கு பள்ளி மாணவர்கள் கொடுத்த ஷாக்! சென்னை திகுதிகு!
சென்னை அருகே உள்ள மதனந்தபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்தகுமார் என்ற கல்லூரி மாணவன், அதே பகுதியை சென்ற கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் காதலுக்கு மறுத்துவந்ததாக தெரியவந்தது. ஆனால், அந்த கல்லூரி மாணவனோ தனது பகுதியில் இருக்கும் சக நண்பர்களுடன் இல்லாததை எல்லாம் கூறி இருவரும் காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து பூந்தமல்லி அருகே காரில் மாணவியை கடத்தியிருக்கின்றனர். கார் மாங்காடு அருகே சென்றபோது பள்ளத்தில் சிக்கியிருக்கிறது. உள்ளே மாணவியின் கதறலை கேட்ட அக்கம்பக்கத்தினர், காரை மடக்கிப்பிடித்து உள்ளே இருந்தவர்களை வெளியே வரச்சொல்லி தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் அவர்களை போலீசிடம் ஒப்படைத்தனர்.
மாணவியை பற்றி விசாரித்தபோது, அவர் உளவியல் பிரிவு அலுவலர் என தெரியவந்துள்ளது. மாணவியை பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.