சென்னையில் வேஷ்டி கட்டி வந்தால் பிரியாணி இலவசம் என பிரபல பிரியாணி கடை ஒன்று அதிரடியாக அறிவித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வேஷ்டி கட்டிட்டு கடைக்கு வந்தா சுடச்சுட பிரியாணி இலவசம்..! சென்னை தொப்பி வாப்பா கடையின் அதிரடி ஆஃபர்! ஏன் தெரியுமா?
தொப்பி வாபா பிரியாணி கடை சென்னையில் இயங்கி வருகிறது, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பிரியாணி வாங்கினால் தண்ணீர் கேன் கொடுத்து அசத்தியது. இந்த நிலையில் , ஜனவர் மாதம் 6 ஆம் தேதி வேஷ்டி தினம் என்பதால் நெசவு தொழிலாற்களை ஊக்கு விக்க நினைத்த தொப்பி வாபா.
அன்று மதியம் 12 மணிக்கு வேஷ்டி அணிந்து வரும் முதல் 50 நபர்களுக்கு ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் எனவும், மேலும் வேஷ்டி கட்டி வரும் ஆண்களுக்கு கதர் அங்கவஸ்திரம் அதாவது மேல் துண்டும் பரிசாக கொடுக்கபட உள்ளதாக அறிவித்துள்ளது. வழக்கம் போலவே தொப்பி வாபா வின் இந்த அதிரடி சலுகையை தான் இணையத்தில் மிக ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் நாளைக்கு வர இருக்கும் கூட்டத்தை சமாளிக்கவும் அந்த நிறுவனம் பிரத்யேக ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.