கங்காராம் திடீர் மரணம்! இறுதி ஊர்வலத்தில் நெகிழ வைத்த பசு! உருக வைக்கும் காரணம்!

தனக்கு உணவளித்த நபரின் இறுதி ஊர்வலத்தில் மாடு ஒன்று கலந்து கொண்ட சம்பவம் மனதை கலங்க வைத்துள்ளது.


சென்னை அடுத்த வேப்பம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காராம். விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அதீத பிரியம் கொண்ட இவர் தினமும் தனது வீட்டு முன் வரும் பிராணிகளுக்கு உணவு அளிப்பது வழக்கம். அதேபோல் தன்னை பசியுடன் நாடி வந்த மாடு ஒன்றுக்கு கீரை மற்றும் இதர உணவுப் பொருட்களைக் கொடுத்து கங்காராம் வளர்த்து வந்துள்ளார்

பசி வந்த போதெல்லாம் அந்த மாடு கங்காராமைத் தேடி அவரது வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்து இருந்தது. வியாழக்கிழமை அன்றும் அந்த மாடு வழக்கம் போல் கங்காரம் வீட்டுக்குச் சென்றது. அவர் வீட்டு முன்பு மக்கள் கூட்டமும் அழுகைக் குரலும் கேட்டு ஒரு நிமிடம் மாடு அப்படியே நின்றுவிட்டது. தனக்கு உணவளித்த கங்காராம் இறந்துவிட்டதை அந்த மாடு உணர்ந்து விட்டது.

அன்றைய தினமே இறுதி ஊர்வலம் நடைபெற்ற நிலையில் அந்த மாடும் ஊர்வலத்தில் கலந்துகொண்டு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது. அவரது உடல் சுடுகாட்டில் வைத்து எரிக்கப்பட்ட உடன் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் தனக்கு உணவளித்த எஜமான் உயிரிழந்ததை எண்ணி வருத்தம் அடைந்த அந்த மாடு கடைசிவரை  சுடுகாட்டிலேயே இருந்தது.

கங்காராமின் உடல் சாம்பலான பின்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. மாட்டின் விசுவாசத்தைம் அந்த மாட்டுக்கும் கங்காராமுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான பந்தத்தையும் கண்டு அந்த ஊர் மக்கள் நெகிழ்ந்து போயினர்.