புதுவையில் காமராஜ் நகர் தேர்தல் முன்னிலை நிலவரம் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு தெம்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
காமராஜர் நகரில் காங்கிரஸ் பாய்ச்சல் தொடர்கிறது! பரிதாபத்தில் என்.ஆர்.காங்கிரஸ்!
ஆம், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றிருக்க, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பின் தங்கியுள்ளார். இப்போது எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 8,868 வாக்குகளும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா 5,084 வாக்குகளும் பெற்றிந்தனர்.
இங்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில்தான் அ.தி.மு.க. இங்கு போட்டியிடாமல் பின்வாங்கியது குறிப்பிடத்தக்க விஷயம். புதுவை காங்கிரஸ் கோட்டை என்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகும் வகையில் புதுவை முன்னணி நிலவரம் அமைந்திருக்கிறது.