இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று ஹரியானாவில் தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துவந்தன.
ஹரியானாவில் பா.ஜ.க.வை மிரட்டும் காங்கிரஸ்! நீடிக்கும் இழுபறி!
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பா.ஜ.க.வுக்கு கடும் சோதனை கொடுத்துவருகிறது காங்கிரஸ் கட்சி. மொத்தமுள்ள 90 சட்டமன்றத்தேர்தல் தொகுதிகளில் இப்போதைய நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 37 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 34 இடங்களிலும் முன்னணியில் உள்ளதால், பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் என்று ஒரு கட்சி இனி எங்கேயும் இல்லை என்று பா.ஜ.க. சொல்லிவந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிலவரம் பா.ஜ.க.வின் கொள்கைக்கு கிடைத்த தோல்வியா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.