திசை மாறும் நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் ராகுல் ஆட்சி..?

பா.ஜ.க. பாணியில் ஆட்சி மாற்றம்


400 லட்சியம் 350 நிச்சயம் என்றெல்லாம் பேசிவந்த பா.ஜ.க.வுக்கு தேர்தல் முடிவுகள் தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு இப்போது தனிக் கட்சியாக அறுதிப் பெரும்பான்மை கிடைக்கப்போவது இல்லை என்பது உறுதியாகி விட்டது.

வேறு வழியே இல்லாமல் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரை நம்பியே ஆட்சி அமைக்கும் நிலையில் மோடி இருக்கிறார்.

ஆகவே, இப்போதே சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரை தொடர்புகொண்டு ஆட்சி அமைப்புக்கு ஆதரவு தருமாறு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

இதுவரை, இப்படிப்பட்ட வேலையை பா.ஜ.க அரசு மட்டுமே செய்துவந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கர்நாடகாவின் சிவகுமார் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

எப்படியாயினும் தனிக்கட்சியாக பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைக்கவே வாய்ப்பு அதிகம். ஆனாலும், அதற்குள் கூட்டணிக் கட்சியில் பேசி முடித்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.