பண்ருட்டி அருகே வன்னியர்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து தலித்துகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
வன்னியர்கள் குடியிருப்புக்குள் புகுந்து தலித்துகள் தாக்குதல்! பண்ருட்டியில் பதற்றம்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது கோ.குச்சிபாளையம். இங்கு வன்னியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அருகில் தலித் மக்கள் வசிக்க கூடிய மேல்கவரப்பட்டு காலனியை சேர்ந்த 4 இளைஞர்கள் அங்கு சென்று, சிறுவர்களிடம் தங்களையும் கிரிக்கெட்டில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஆனால் சிறுவர்களான தங்கள் இளைஞர்களுடன் எப்படி விளையாட முடியும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.
இதனால் வன்னியர் சிறுவர்களுக்கும் தலித் இளைஞர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது தலித் இளைஞர்கள் சிலர் தங்கள் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை குச்சிபாளையம் வரவழைத்தனர்.
மேலும் அங்குள்ள வன்னியர்களின் வீடுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வன்னியர் குடியிருப்பை சேர்ந்த புவனேஷ்வரன், தயாளன், ரகுபதி உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்தனர். தலித்துகள் வன்னியர்கள் குடியிருப்புகளுக்குள் சென்று தாக்குதல் நடத்தியதால் பண்ருட்டி சுற்றுவட்டாரத்தில் பதற்றம் நிலவுகிறது.