கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்! நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்! பிறகு நடந்த விபரீதம்!

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே தாயின் தவறான போக்கை கண்டித்த மகளை தாயின் கள்ளக் காதலன் அடித்து துன்புறுத்தியதால் மகள் தற்கொலை செய்துகொண்டார்.


சின்ன சேலத்தை அடுத்தநயினார் பாளையத்தை சேர்த்த வெங்கடேசன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவரது மறைவுக்குப் பின் அவரது மனைவி கவிதா தேவி, 12-ஆம் வகுப்பு படிக்கும் வைதேகி, 10-ஆம் வகுப்பு படிக்கும் பாக்கியலட்சுமி, 5-ஆம் வகுப்பு படிக்கும் மகாலட்சுமி என முன்று மகள்களையும் வேலைக்குச் சென்று காப்பாற்றி வந்தார். 

இந்நிலையில் கவிதா தேவிக்கும், கிராம உதவியாளரான ரமணா என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த அலங்கோலத்தை கவிதா தேவியின் இரண்டாவது மகளான பாக்கிய லட்சுமி ஒருநாள் நேரில் பார்த்துவிட்டதாகவும், அது தவறு என்று கூறி தனது தாயைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து தாயின் கள்ளக் காதலன் ரமணா அடித்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்த பாக்கிய லட்சுமி வீட்டில் இருந்த பூச்சி மருதை எடுத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பாக்கிய லட்சுமியின் தாத்தா முனுசாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்  கவிதா தேவியையும், ரமணாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.