ஒரு பக்கம் மாணவர்கள் போராட்டம்.மறு பக்கம் காவல்துறை போராட்டம்.
டெல்லி தேர்தல் அறிவிப்பு. மீண்டும் முதல்வர் ஆகிறாரா அரவிந்த் கேஜ்ரிவால்?
இன்னொரு பக்கம் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் என தினம் தினம் குங்ஃபூ சண்டைக்கு இணையாக ஆட்டம் கண்டுள்ளது இந்தியாவின் தலைநகர் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான டெல்லி.! மீண்டுமொரு தர்பார் பேரணிக்காக தயாராகி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள டெல்லி சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து. ஆம் ஆத்மி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போர்க்கால வேகத்தில் களத்தில் குதித்துள்ளன.
கடந்த சில நாட்களாக இந்திய தலைநகர் டெல்லி நகரம் வரலாறு காணாத போராட்ட சம்பவங்களை கண்டு வருகிறது. இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள கடுமையான குளிர்கால நிலைமையால் . பனிப்பொழிவு மற்றும் காற்று மாசுபாடு ஏற்பட்டு மக்கள் வாழ தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
மொத்தம் 70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி யூனியன் பிரதேச மாநிலங்களில் தனி அந்தஸ்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை அடுத்து. டெல்லி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
சுமார் 1 கோடியே 47 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில். கடந்த முறை ஆம் ஆத்மி கட்சி 67 உறுப்பினர்களைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வரும் போராட்ட சூழலில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிவிப்பினால். இந்த தேர்தல் முடிவுகள் ஆளும் மத்திய அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அறிய முடிகிறது.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் திமுக திரிணாமுல் காங்கிரசு மற்றும் சிவசேனா போன்ற கட்சிகள் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த இக்கட்டான அரசியல் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கிய டெல்லி சட்டசபையில் கடந்த முறை ஒரு உறுப்பினர்கள் கூட தேர்வாகவில்லை என்பதும். முறையே பாஜக 3 உறுப்பினர்களோடு எதிர்கட்சி வரிசையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மக்களவை தேர்தலில் டெல்லியின் 6 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றதன் காரணமாக. டெல்லி சட்டசபையை ஆக்கிரமிக்க தீவிரம் காட்டி வருகிறது பாஜக.
இதேவேளையில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் டெல்லியை குறி வைப்பதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் டெல்லியில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி நடைபெற்ற கருத்துக் கணிப்பில். மீண்டும் அரவிந்த் கேஜ்ரிவாலே முதல்வராக டெல்லி மக்கள் விரும்புவதாக ஐஏஎன்எஸ்-சிவோட்டர் கருத்துக் கணிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த ஜனவரி 4ம் தேதி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், “டெல்லி முதல்வராக யாரை ஆதரிக்கிறீர்கள்” என்ற கேள்விக்கு 9 பிரிவுகளின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 69.5% பேர் தற்போதைய முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் பெயரைத் தேர்ந்தெடுதுள்ளதாக தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.
இந்நிலையில் திடீர் தாக்குதல்களுக்கு ஆளான ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்கட்சிகள் ஒன்றினைந்து போராடி வருகின்றனர். கடந்த சில தேர்தல்களில் கடும் தோல்வியை தழுவி வரும் பாஜகவிற்கு. டெல்லி தேர்தல் வாழ்வா சாவா என்கிற திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.
மணியன் கலியமூர்த்தி