சாய் பல்லவியுடன் சேர்ந்து தனுஷ் செய்த தரமான சம்பவம்! விஜய் ரசிகர்கள் பேரதிர்ச்சி!

மாரி 2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் யூ டியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடலாக வரலாறு புரிந்துள்ளது.


   இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்ற பாடல் ஆளப்போறான் தமிழன். விஜய் நடித்த இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆளப்போறான் தமிழன் பாடல் தமிழ் மக்களின் கீதமாகவே மாறிப்போனது. யூட்யூபில் இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை ஆளப்போறான் தமிழன் பாடல் செய்தது. 

 

   படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இப்பாடலானது யூடியூபில் ஒன்பது கோடியே ஒரு லட்சம் தடவை பார்க்கப்பட்ட துடன் தொடர்ந்து பல முறை பார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடல் செய்துள்ள சாதனையை அண்மையில் வெளியான மாரி 2 படம் முறியடித்துள்ளது.

 

   மாரி படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 

 

   இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் அனைத்து தரப்பினரையும் ஈர்த்தது. இந்தப் பாடல் தான் தற்போது ஆளப்போறான் தமிழன் பாடலை யூட்யூப்பில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

 

   ஆளப்போறான் தமிழன் பாடல் 9 கோடிக்கும் அதிகமான முறையில் பார்க்கப்பட்ட நிலையில் ரவுடி பேபி என்ற பாடல் 9 கோடியே 50 லட்சம் முறை பார்க்கப்பட்டு ஆளப்போறான் தமிழன் பாடலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.

 

   இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருந்தார். பாடலில் தனுஷ் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் நடனம் அசத்தும் வகையில் இருந்தது. இதுதான் இந்த பாடல் காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. தொடர்ந்து யூடியூபில் பார்க்கப்பட்டு வரும் ரவுடி பேபி பாடல் விரைவில் 10 கோடி என்கிற இலக்கை எட்டும். 


   அவ்வாறு 10 கோடி முறை இந்த பாடல் பார்க்கப்பட்டால் தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக யூடியூபில் ரவுடி பேபி அமையும். இந்த பாடலை யூடியூபில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.