பிரசாந்த் கிஷோர் என்றாலே, கொலைகாரரைப் பார்ப்பது போன்று தி.மு.க.வினர் அலறுகின்றனர்..! ஏன் தெரியுமா?

கொரோனா நோய் வெகுவேகமாக பரவிய காலத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, அனைத்துக் கட்சியினரையும் வெளியே வரச்சொன்னார் பிரசாந்த் கிஷோர்.


அதனால்தான், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரா இருந்த ஜெ.அன்பழகன், மரணத்தைத் தழுவ நேர்ந்தது. அன்று முதல் பிரசாந்த் கிஷோர் என்றாலே, கொலைகாரரைப் பார்ப்பது போன்று தி.மு.க.வினர் அலறுகின்றனர். இதையடுத்து கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் தி.மு.க.வினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை பிரசாந்த் கிஷோர் டீம் சரிவர கையாளவில்லை என்று தி.மு.க.வினர் கடுப்பானார்கள்.

இந்த நிலையில், கொரோனா தொற்றினால் ஐபேக் ஊழியர்கள் ஒருசிலர் பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள ஐபேக் நிறுவனம் மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தேர்தல் களப்பணிகள் எல்லாமே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இனியும் தேர்தலுக்கு ஒரு நிபுணர் வேண்டுமா, அப்படியே மூடப்பட்டது மூடப்பட்டதாகவே இருக்கட்டும், பிரசாந்த் கிஷோரை அனுமதிக்க வேண்டாம் என்று தி.மு.க.வினர் பலரும் தலைமைக்கு மொட்டைக் கடுதாசி எழுதி வருகிறார்களாம். ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பார்க்கலாம்.