குடிப்பழக்கத்தால் சலம்பிய மனைவி! கழுத்தை நெறித்து கொன்ற கணவன்! தாராபுரத்தில் பயங்கரம்!

தாராபுரம் அருகே குடிபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55). இவருடைய மனைவி  ஜோதிமணி(47). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு குழந்தை பிறந்து  சில வருடங்களிலேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. 

பொன்னுச்சாமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டு விட்டது.இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பொன்னுசாமி, தனது மனைவியுடன் தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பழைய சித்ரா திரையரங்கத்திற்கு எதிரே உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் குடிபோதையில் அடிக்கடி வாக்குவாதம் செய்து கொள்வது உண்டு.

இந்த நிலையில் நேற்று மாலை குடிபோதையில் இருந்த பொன்னுச்சாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி அருகில் இருந்த அரிவாளை எடுத்து ஜோதிமணி தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து ஜோதிமணிக்கு பலமான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே  ஜோதிமணி  இருந்ததாக தெரிகிறது .இதனால் அதிர்ச்சி அடைந்த  பொன்னுச்சாமி என்ன செய்வதென்றே தெரியாமல் உடனே பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் தனது மனைவி திடீரென மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் பொன்னுசாமியின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர்.அங்கு ஜோதிமணி் தலையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்து பொன்னுசாமி, மனைவியை வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று கருதி இது குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்ததும் பொன்னுசாமி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட ஜோதிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குடியிருப்பு பகுதியில் மனைவியை படுகொலை செய்த கணவரின் வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தலைமறைவான பொன்னுசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.