வெள்ளை முடி வர தொடங்கிவிட்டதா? முந்திரி சாப்பிட தொடங்குங்கள்! ஏன்?

முந்திரியில் காப்பர் என்னும் தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே உங்களுக்கு வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உட்கொண்டு வாருங்கள்.


முந்திரியில் உள்ள இரண்டு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் (lutein, zeaxanthin) கண் பார்வை கூர்மை பெருமாம். இதிலுள்ள வைட்டமின் பி சத்து செரோடோனின் என்ற ஹார்மோனை தூண்டுவதால் எப்போதும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் கூடும், சருமம் புத்துணர்வுடன் பொலிவாக இருக்கும். 

தினமும் 4 முந்திரியை சாப்பிடுவதால் இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்பு சத்து உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை சீரான அளவில் உற்பத்தி செய்யும். ரத்த நாளங்கள், எலும்புகள், நரம்புகள், மற்றும் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதுகாத்து, இவற்றின் செயல்திறனை அதிகரிக்கும். முந்திரியில் உள்ள ப்ரோன்தோசயாடின் என்கிற மூல பொருள் புற்றுநோயை செல்களை உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் உடையது.

முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. எனவே உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொண்டு வாருங்கள்.