குழந்தை வரத்திற்காக காத்திருக்கும் பெண்களா நீங்கள்! வீட்டில் மலைவேம்பு வைத்தியம் செய்து பார்த்தீர்களா?

மலைவேம்பு இலைச் சாறு வைரஸை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது.


பெண்களுக்குக் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தால், நீர்க்கட்டி வளர்ச்சி குறையும்.

கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். கர்ப்பப்பையை வலுவாக்கி மலட்டுத் தன்மையை போக்கும் சக்தி வாய்ந்தது. மலைவேம்பு சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும். 

மலைவேம்பு பட்டை சிறுநீரக கோளாறுகளையும் போக்கும். தொடர்ந்து மலைவேம்பு பட்டை கஷாயம் குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் புழுக்களை அழித்து துர்நாற்றத்துடன் வெளியேறும் சிறுநீர் தொந்தரவுகளை சீர்ப்படுத்தும்.

பசியை தூண்ட மலைவேம்பு பெரிதும் பயன்படுகிறது. பசி எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் மலைவேம்பு பூ மற்றும் காயை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலையில் மட்டும் கஷாயம் வைத்து குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும்.