தமிழகத்தில் 3வது மொழியாக இந்தி பாடம் பயில வேண்டும் என்பது கட்டாயமல்ல: வரைவுத் திட்டம் வெளியீடு!
இந்தி கட்டாயம் இல்லை! தமிழர்களிடம் மோடி சரண்டர்!
தமிழகத்தில் 3வது மொழியாக இந்தி பாடம் பயில வேண்டும் என்பது கட்டாயமல்ல என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இணையதளத்தில் திருத்தம் செய்யப்பட்ட புதிய கல்வி கொள்கை வரைவை மத்திய அரசு வெளியிட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. பள்ளிகளில் 3வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.