இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.
மலச்சிக்கலை தீர்க்க எளிய வைத்திய முறைகள்!
போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல்.இது உடலில் உள் சூட்டை தணிக்கும்.மேலும் கண் பார்வை தெளிவாகும்.மூலாதார சூட்டையும் தணிக்கும்.
தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்க்கவும்.மேலும் தண்ணீர் நிறைய குடியுங்கள். தினமும் பச்சை காய்கறிகள்,பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி,புட்டு,இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும்.
இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம். காலை உணவைத் தவிர்க்காமல் நேரத்துக்கு சாப்பிடுவது டன், சரிவிகித உணவு உட் கொள்ளவும். தினமும் குறைந் தது 2.5 – 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து இண்டியன் டாய் லெட்டை பயன்படுத்தவும்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவும். மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் அடக்காமல் கழிவறை சென்று விடவும். மன அழுத்தம் தவிர்க்கவும்.
“உடலின் இயல்பான ஓர் இயக்கம் நடைபெறுவதற்கான மேற்சொன்ன வாழ்க்கை முறை மாற்றங்களை வழக்கமாக்கிக் கொண்டால், மலச்சிக்கல் மட்டுமல்ல, எந்தப் பிரச்னையும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம்”